தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீரால் சூழ்ந்த சார்ந்தநாதர் கோயில்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! - புதுக்கோட்டை மாவட்ட செய்தி

புதுக்கோட்டை: கனமழையால் சார்ந்தநாதர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆறுபோல் காட்சியளிக்கும் சார்ந்தநாதர் கோயில்

By

Published : Oct 31, 2019, 11:40 AM IST


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சார்ந்தநாதர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோயில் பூட்டப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்லாங்குளம் நிரம்பி, சாந்தநாதர் கோயில் வளாகத்துக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

ஆறுபோல் காட்சியளிக்கும் சார்ந்தநாதர் கோயில்

இதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வீடு திரும்புகின்றனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோல் கனமழை பெய்தபோது, இந்த கோயில் உள்ளே மழைநீர் புகுந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

அதேபோல், தற்போது பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் கோயிலுக்குள் புகுந்துள்ளதால் வெளியே செல்ல வழியில்லாமல் ஆறுபோல் ஓடுகின்றது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க : லேசான மழைக்கே ஒழுகும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடம்!

ABOUT THE AUTHOR

...view details