தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் அவதி - ஏழைகளின் பசியை போக்கும் புதுக்கோட்டை இளைஞர்கள் - prabakaran puratchi vithaikal

புதுக்கோட்டை: ஊரடங்கால் ஒருவேளை உணவிற்கே அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவளித்து அவர்களின் பசியை போக்கிவருகின்றனர் ”பிரபாகரன் புரட்சி விதைகள்” அமைப்பின் இளைஞர்கள்.

pudukkottai
pudukkottai

By

Published : May 9, 2020, 4:12 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அன்றாட கூலித் தொழிலாளிகள், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் என பலரும் உணவில்லாமல் பசியில் வாடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் நல்உள்ளம் கொண்ட பலர் தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ”பிரபாகரன் புரட்சி விதைகள்” என்ற அமைப்பினர் ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படும் ஏழை,எளிய மக்களின் பசியை போக்கிவருகின்றனர்.

பிரபாகரன் புரட்சி விதைகள் அமைப்பினர்

’ஒருநபரின் ஒருவேளை உணவிற்கு 33 ரூபாய் நிதியுதவி கொடுத்தால் போதும்’ என்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் இவர்கள் நிதியுதவி கேட்டனர்.

இதனைப்பார்த்த பலரும் பத்து ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தங்களால் இயன்ற நிதியுதவியை கொடுத்தனர். இந்த நிதியைக் கொண்டு ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகை பொருள்கள், உணவு போன்றவற்றை தொடர்ந்து ஒருமாதமாக இந்த இளைஞர்கள் வழங்கிவருகின்றனர். இளைஞர்கள் எடுத்த இந்த முயற்சியால் ஏழை, எளிய மக்களின் வயிறு மட்டும் அல்லாது அவர்களின் மனங்களும் நிறைந்துள்ளன.

ஏழைகளின் பசியை போக்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்

அனைத்துப் பகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் நாள்தோறும் இயங்கக்கூடிய அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள சத்துணவு கூடங்கள் மூலம் உணவு தயாரித்துகொடுத்தாலே உணவு பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:உணவு மறுக்கப்பட்ட அவலம்: சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்துவந்த தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details