தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1200 மதுபாட்டில்கள் அழிப்பு... காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை - liquor

மீமிசல் காவல் நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட 1,200 மதுபாட்டில்களை காவல் துறையினர் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் துறையினர்  மீமிசல் காவல் நிலையம்  புதுக்கோட்டையில் மது பாட்டில்கள் அழிப்பு  மது பாட்டில்கள் அழிப்பு  புதுக்கோட்டை செய்திகள்  மதுபாட்டில்கள்  pudukkottai news  pudukkottai latest news  pudukkottai police action on liquor  pudukkottai police action on Destruction liquor  liquor  wine bottle
மதுபாட்டில்கள் அழிப்பு

By

Published : Aug 7, 2021, 9:15 PM IST

புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையை முன்னிட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கின்போது மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தனர்.

இதனையறிந்த காவல் துறையினர், மீமிசல் காவல் சரகத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது கைப்பற்றப்பட்ட 1,200 மதுபாட்டில்களை தரையில் ஊற்றி அழிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மணமேல்குடி காவல் ஆய்வாளர் சாமுவேல் ஞானம், மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் துரை சிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் காவலர்கள் மதுபாட்டில்களை திறந்து தரையில் ஊற்றியழித்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி தங்கையின் நிலத்தை அபகரித்த அண்ணன்!

ABOUT THE AUTHOR

...view details