கரோனா பாதிப்பை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உணர்ந்து மூன்று மாத காலத்திற்கு சுய உதவிக் குழு உள்ளிட்ட எந்த கடன்களையும் வசூல் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அறிவித்தனர்.
அதனடிப்படையில் வங்கிகள், தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்திருந்தபோதும் அதனை மீறி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண்களிடம் கட்டாய கடன் வசூலில் ஈடுபடுவதோடு கூடுதல் வட்டி கேட்டு பெண்களை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.