புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி டிஎன்பிஎஸ்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 17) கவிதா ராமு பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்களுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு பல உத்தரவுகளை அனுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி, பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும். அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும்.
முதல் முறையாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ள சிறப்புகள் குறித்து ஏற்கனவே தெரியும். இன்னும் என்னென்ன மாவட்டத்திற்கு தேவை என அறிந்து கொண்டு சிறப்பாக நிச்சயம் செயலாற்றவேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகிழ்ச்சி, மனநிறைவு- மு.க. ஸ்டாலின்