புதுக்கோட்டை:புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பாக பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பழமையான கட்டடமாக இருப்பதால் அவ்வப்போது மழைக்காலங்களில் மேற்கூரைகளின் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகின்றது. மேலும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தற்காலிக பேருந்து நிலையம் தேவைப்படுவதால் அவற்றை அமைக்கும் பணியும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு முன்பாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சுழ்ந்து காணப்பட்டது.