புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 4ஆயிரத்து 449 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 67 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா உறுதி! - கரோனா எண்ணிக்கை
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம், அவரது மகன் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் அவருடைய மகன் முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.