புதுக்கோட்டை: கறம்பக்குடி தாலுகா சூரக்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் மகாலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மோகனிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக கடந்த 2019 ஜனவரி 31 அன்று இரவு 9 மணிக்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், மகாலட்சுமியை கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.