தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் மூட்டைகளை இறக்க இடம் இல்லை - லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் - Pudukkottai lorry drivers pick up the road

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ள அரசு நுகர்பொருள் வணிப கழகத்தில் நெல்மூட்டைகளை இறக்க அலுவலர்கள் இடம் இல்லை என்று கூறியதால் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்
லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்

By

Published : Mar 16, 2020, 11:51 PM IST

Updated : Mar 17, 2020, 12:03 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அழியாநிலை பகுதியில் அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கு உள்ளது. இங்கு அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி உள்ளிட்ட 16 நிலையங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கபடுகிறது. தற்போது இந்த கிடங்கில் நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என்று அலுவலர்கள் கூறியதால் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் அடைக்கலம் கூறுகையில், "கடந்த சில மாதமாக அறந்தாங்கி சுற்றுவட்டார ஒன்றிய பகுதிகளில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை ஏற்றி வருகிறோம். அதற்கான வாடகை சரியான முறையில் வழங்கப்படவில்லை. நெல் மூட்டைகளை இறக்குவதிலும் அலுவலர்கள் மிகுந்த தாமதம் செய்கின்றனர். இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் கேட்டாலும் முறையான பதில் கூறுவதில்லை" என்றனர்.

லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்

மேலும், நெல் மூட்டைகளை இறக்க கூட இடம் இல்லை என்று தற்போது அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிகளிடம் முன்பதிவு செய்து விதை நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி!

Last Updated : Mar 17, 2020, 12:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details