புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு வாகன பரப்புரை நடைபெற்றது.
அந்த பரப்புரையில் கானொலி மூலமாக புதுக்கோட்டை காவல் கண்கானிப்பாளர் மருத்துவர் அருண்சக்தி குமார் செயலியின் பயன்பாடு குறித்த காணொலி விளக்கத்தினை அளித்தார்.
இந்த காணெலி விளக்தினை பற்றி ஆவுடையார் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் பாரதிதாசன் மாதிரி பல்கலை கல்லூரி மாணவர்கள் பலரும் தெரிந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த காவலன் செயலி குறித்த விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில் ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு காவலன் செயலியின் வாகன பரப்புரை! இதையும் படிங்க:காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி