புதுக்கோட்டையில் புவனேஸ்வரி தங்க மாளிகை என்னும் நகைக்கடை 39 ஆண்டுகலாக செயல்பட்டுவருகிறது. தற்போது நாற்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் அந்த நகைக்கடை உரிமையாளர் உலகிலேயே மிகப்பெரிய ஒட்டியானம் வடிவமைக்க முடிவு செய்து பணியை தொடங்கினார்.
12 பொற்கொல்லர்கள் மூலம் மார் 8 மாதங்கள் ஒட்டியானம் செய்யும் பணியில் ஈடுபட்ட அதை செய்து முடித்தனர். இந்த ஒட்டியானம் இரண்டு கிலோ 851 கிராம் மற்றும் 260 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.
உலகிலேயே மிகப்பெரிய தங்க ஒட்டியானம் அதனை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஜவகர் கார்த்திகேயன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி அசோஸியேட் எடிட்டர் ஜெகன்நாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென்னிந்திய ஆய்வாளர் ராஜ் கிருஷ்ணா ஆகியோர் சோதனை செய்தனர்.
அதன்பின் அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஒட்டியானம் என அறிவித்தனர். அதையடுத்து சான்றிதழ்களையும் பதங்கங்களையும் உரிமையாளருக்கு வழங்கினர்.
இதையும் படிங்க:சரிவில் தங்கம் விலை; ரூ. 614 குறைவு!