ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புவனேஸ்வரி தம்பதியினருக்கு ஜூன் எட்டாம் தேதி அறந்தாங்கி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிறக்கும்போதே வலது முழங்கால் பகுதியில் ஒரு ரத்தக்கட்டி இருந்ததனால், மேல்சிகிச்சைக்காக அக்குழந்தை அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பத்தாம் தேதி அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவு எடுத்து இன்று அறுவை சிகிச்சை செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. இக்குழந்தை நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், "இந்தக் குழந்தைக்கு காலில் ரத்தக்கட்டி இருந்ததனால் கால் தரையில் பட்டாலே ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில் எந்த ரத்தக் குழாயில் இருந்து இந்த ரத்த நாள முடிச்சுகள் உருவாகின என்று கண்டறிந்து அந்த ரத்த நாளத்தில் இருந்து இந்த கட்டியைப் பிரித்து மிக நுண்ணிய அளவிலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.