தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்பியோடிய கைதி ராஜா பிடிபட்டார் - இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் - தப்பியோடிய கைதி பிடிபட்டார்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி ராஜா நேற்று (ஜூலை 16) தப்பி ஓடிய நிலையில் முள்ளூர் காட்டில் மீண்டும் பிடிபட்டார்.

raja
raja

By

Published : Jul 17, 2020, 9:23 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் பூக்கடைக்காரர் ராஜா (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் பூக்கடைக்காரர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை குற்றவாளி ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு காவலர்கள் கோகுல், குமார், முருகையன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது கையில் மாட்டியிருந்த விலங்கை உருவிக்கொண்டு குற்றவாளி ராஜா தப்பியோடினார்.

தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடினர். இந்நிலையில், கைதி ராஜா முள்ளூர் கிராம காட்டு பகுதியில் நேற்று இரவு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனால் நியமிக்கப்பட்ட 6 தனிப்படை காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், கைதி ராஜா தப்பி ஓடும் அளவிற்கு கவனக்குறைவாக இருந்த காவலர்கள் கோகுல் குமார் மற்றும் முருகையன் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: 'இறுதித் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு': அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details