புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அசோக் நகரில் வசித்துவரும் ஆனந்தராஜ், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது, அவருக்கு 38 வயது ஆகியிருக்கும் சூழலில் அண்மையில், 24ஆவது முறையாக பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இதனை கலாய்த்து அவரது நண்பர்கள், அவருக்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளனர்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24ஆவது முறையாக பதிவை புதுப்பித்த எங்களது நண்பர் ஆனந்தராஜுக்கு வாழ்த்துகள். இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நலன்விசாரிப்புக் கடிதம்கூட வரவில்லை என்று நக்கலாக வாசகத்தை அடித்துள்ளனர். மேலும், இப்படிக்கு வேலையில்லா இளைஞர்கள் என்றும் அந்தப் பிளக்ஸில் குறிப்பிட்டுள்ளனர்.