தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படையினர் அத்துமீறல்!

புதுக்கோட்டை: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

fishermen arrest

By

Published : Oct 17, 2019, 9:42 PM IST

புதுக்கோட்ட மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து நேற்று காலை (அக்.16) 172 விசைப்படகுகளில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

புதுகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஷாஜகான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்து, அதிலிருந்த கடல்ராஜா (34), ரமேஷ் (32) செந்தில் (37) ஆகிய மூவரை கைது செய்தனர்.

தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details