தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் அமல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாகிவிடும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,
காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், வேளாண் மண்டல அதிகார அமைப்பில் விவசாய சங்க விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பாரம்பரிய பருத்தியை மீட்டெடுக்கும் ஜப்பானியப் பெண்!