தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேந்தமங்கலம் அணைக்கட்டு மீட்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து சேந்தமங்கலம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு மீட்கப்படுமா என்று பொதுமக்கள் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சேந்தமங்கலம்

By

Published : Jul 20, 2019, 9:47 PM IST

Updated : Jul 21, 2019, 2:29 PM IST

அணையின் வரலாறு :

1800ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மிகச்சிறந்த மாவட்டமாக திகழ்ந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் என்றாலே நஞ்சை, புஞ்சை, என அனைத்தும் விளையும் அளவிற்கு நீர் வளங்களையும், நிலங்களையும் கொண்டு விளங்கியது.

வற்றாத நீர் வளம் மிக்க மழை ஆதாரங்களைக் கொண்ட மாவட்டமாக இருந்தபோது, ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் என்ற மன்னர் ஆட்சியில் 1838ல் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர புதுக்கோட்டைக்கு ஒரு கால்வாய் வெட்ட திட்டமிட்டார். ஆனால் இதற்கு ஆகும் செலவை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை ஆங்கிலேய அரசு ஒத்தி வைத்தது.

பின்பு 1839 ஜுலை 13ஆம் தேதி பகதூர் தொண்டைமான் இறந்த பிறகு அவரது மூத்த மகனான ராஜா ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு மன்னராகப் பொறுப்பேற்றார். அவர் சேந்தமங்கலம் பகுதியில் அணைக்கட்டு ஒன்றை கட்டினார். இந்த அணைக்கட்டு வெள்ளாற்றின் இடையே கட்டப்பட்டது. இங்கிருந்து கவிநாடு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மாவட்டம் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

காவிரி நீர் வாங்க மன்னர் மறுப்பு:

அதன்பிறகு 1920களில் காவிரி ஆற்றிலிருந்து தஞ்சாவூருக்கு ஆங்கிலேயேர்கள் தண்ணீர் கொடுத்தபோது, புதுக்கோட்டைக்கும் காவிரி தண்ணீர் தருவதாக மன்னரிடம் தெரிவித்தனர். ஆனால் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானம் வளம் மிக்கதாக இருந்ததால் மன்னர் காவிரி நீர் தேவை இல்லை என்று கூறிவிட்டார்.

தண்ணீர் குடத்துடன் வரும் பெண்கள்

முதல் எம்.பி கோரிக்கை :

இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருபோதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. 1955-க்குப் பிறகு புதுக்கோட்டைக்கு முதல் எம்.பியாக வல்லத்தரசு என்பவர் முதன் முதலாக காவிரியில் இருந்து வரும் உபரி நீரை மாயனூர், துவரங்குறிச்சி வழியாக சேந்தமங்கலம் அணைக்கட்டிற்கு திருப்பிவிட கோரிக்கையை வைக்க தொடங்கினார். அதன்பின் இன்றுவரை விவசாயிகளும் அந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசிடம் வேண்டி வருகின்றனர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்கோடு நின்று விடுகிறது இந்த முயற்சி.

அணையின் கட்டட அமைப்பு :

1838-இல் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு மிகவும் நுணுக்கமாக பாறைகளை சிதைக்காமல் உடைக்காமல் சுண்ணாம்பு மற்றும் கற்களை வைத்து கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அணைக்கட்டிற்கு தேவையான அனைத்து கட்டுமானங்களும் அந்த காலத்திலேயே சிறப்பாக கட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகள் வரை தண்ணீர் வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சொட்டு நீர்கூட அந்த ஆற்றில் தற்போது இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை போன்றவற்றை ஒரு காரணமாக சொன்னாலும், இதற்கு முக்கியக் காரணம் அணைக்கட்டின் மையப்பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பாறைகளை வெட்டி கடத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர் சில விஷமிகள்.

வறண்டு கிடக்கும் சேந்தமங்கலம் அணை

துளியளவு பாறையை செதுக்கினால்கூட தண்ணீர் வராமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் மன்னர் பார்த்து பார்த்து கட்டிய இந்த அணைக்கட்டு தற்போது ஊழல் வியாபாரம் என்ற நோக்கில் அலுவலர்களின் அலட்சியத்தால் சிதைத்துவிட்டனர். அரசாங்கம் காவிரி உபரி நீரை தந்தாலும் எங்கு எப்படி அதனை வர விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. காவிரி தண்ணீரை கொடுப்பதற்கு அணைக்கட்டு கட்ட வேண்டுமே வழு அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு வேலையும் அரசுக்கு இல்லை ஏனென்றால் மன்னர் அப்படி ஒரு சிறப்பான கட்டுமானத்தை கட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

ஆனால் அதை வைத்து முறையாக தண்ணீரை விடாமல் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு போய்விட்டார்கள். பாறைகளை கடந்து செல்வதன் மூலம் மழைநீர் ஆற்றின் வழியே வரமுடியாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு சொட்டு தண்ணீர்கூட அந்த ஆற்றின் வழியே வருவதில்லை.

வறண்டு கிடக்கும் சேந்தமங்கலம் அணைக்கட்டு பகுதி காட்சிகள்

அரசியல் விஷமிகளின் விளையாட்டு :

புதுக்கோட்டை மாவட்டம் தண்ணீர் பஞ்சத்தின் உச்சகட்டத்தில் இருப்பது தெரிந்தும் அதிகாரிகளின் அனுமதியுடன் இதுபோன்ற செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர் அரசியல் விஷமிகள். இந்த அணைக்கட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலோ, அல்லது முறையான நடவடிக்கை எடுத்தாலோ அணைக்கட்டு முழுமையாக பாதுகாக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மீண்டும் வளமான மாவட்டமாக மாற்றுவதற்கு ஏதுவான வாய்ப்பு அமையும். இந்த அணைக்கட்டை பார்க்கும் பொழுது இந்த குறுகிய இடத்தில் இப்படி ஒரு அணையை கட்ட முடியுமா என்ற ஆச்சரியத்தையும் இப்படிப்பட்ட அணைக்கட்டு அரசியல்வாதிகளால் சிதைந்து கொண்டிருக்கிறது என்ற வேதனையையும்தான் தருகிறது.

Last Updated : Jul 21, 2019, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details