புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 682 பேர், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 63 ஆயிரத்து 731 பேர், மூன்றாம் பாலினத்தவர் 85 பேர் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - புதுக்கோட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்
புதுக்கோட்டை: மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்சியர் உமா மகேஸ்வரி வெளியிட்டார்.
pudukkottai
அதில் புதிதாக ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 118 பேர், பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 316 பேர், மூன்றாம் பாலினத்தவர் 37 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் போலி வாக்களர்கள் ஆண், பெண் சேர்த்து 571 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!