புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பரபரப்பு: போலீஸ் - மக்கள் வாக்குவாதம் - 100 மீட்டருக்கு அப்பால்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
Excludes Voting Counting Center
அப்போது ஒரு முதியவர் கீழே விழுந்ததால் காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வேட்பாளர்களை அழைக்கும்போது மட்டும் வந்தால் போதும் என அனைவரையும் 100 மீட்டருக்கு அப்பால் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுகளை ஆமை வேகத்தில் பதிவிடும் தேர்தல் ஆணைய இணைதளம்!