புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய திருத்தலமாக திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இக்கோயில் தேரானது மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்த்திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு, தொடங்கி வைத்தார். மேலும், இதில் 'புதுக்கோட்டை இளைய மன்னர்' என்று அழைக்கக்கூடிய கார்த்திக் தொண்டைமான், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.