தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜின்னா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும், எப்.சி இன்சுரன்ஸ் பர்மிட் முடிந்த நாளிலிருந்து ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்திட வேண்டும்.