தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்காட்டில் வலிப்பு வந்தவரை மருத்துவர் காப்பாற்றினார்!

புதுக்கோட்டை: செட்டியாபட்டி நடுக்காட்டு பகுதியில் வலிப்பு வந்து உயிருக்கு போராடியவரை அவ்வழியாக வந்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.

pudukkottai-at-chettipatti-forest-a-doctor-rescued-a-deadly-serious-driver
நடுக்காட்டில் வலிப்பு வந்தவரை மருத்துவர் காப்பாற்றினார்!

By

Published : Jan 24, 2020, 8:02 PM IST

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் தவலைப்பள்ளம் சாலையில் செட்டியாபட்டி விலக்கு சாலை உள்ளது.

இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் சாலைபோடும் ரோலர் வண்டியை ஓட்டிவந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு வந்ததால் வண்டியிலிருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

அப்போது, அந்த வழியாக சென்ற ஆலங்குடி தலைமை மருத்துவர் மு.பெரியசாமி உடனடியாக அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளித்து சுமார் அரைமணி நேரம் போராடி அவரது உயிரை காப்பாற்றினார். மேலும், அந்த நபர் ஏற்கனவே கட்டியிருந்த செயற்கை பல் கழன்று அவரின் தொண்டைப் பகுதியில் அடைபட்டிருந்தது. அந்த செயற்கை பல் செட்டானது மூச்சுக்குழாயில் சென்று அடைபடாமல் வெளியில் எடுக்கப்பட்டதால் அவரது உயிரும் பாதுகாக்கப்பட்டது.

ஓட்டுநரை மருத்துவர் பார்க்கும்போது

மேலும் அவரை மேல் சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்துவர ஏற்பாடுகளை செய்துவிட்டு, மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவர் பெரியசாமி கூறினார். இதுபற்றி மருத்துவர் கூறும்போது, நடுக்காட்டில் ஒரு உயிரை காப்பாற்றியது மிகவும் மனநிறைவைத் தருகிறது. மேலும் அவர், மருத்துவ பரிசோதனைகள் செய்து அதன் பின் தக்க ஆலோசனைகளையும் மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற நேரங்களில் 108 உதவியை அருகில் இருப்பவர்கள் அணுகி உதவி செய்யவேண்டும் என்றார்.

இதையும் படியுங்க: மருத்துவர் ஒருமையில் பேசியதால் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details