விவசாயிகள் அனைவருக்கும் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு ப்ரீமிய கட்டணம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 503 ரூபாய், துவரை பச்சைப்பயறு மற்றும் உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிர்களுக்கு 260 ரூபாய், நிலக்கடலைக்கு 432 ரூபாய், கம்புக்கு 148 ரூபாய், வாழைக்கு 2,308 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இணையதள சேவையை நாடி வந்தனர். பயிர் காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15ஆம் தேதிதான் கடைசி நாள். ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இணையதள சேவை இயங்கவில்லை. இதனிடையே தனியார் நிறுவன இணையதள சேவைகளும் இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புகுள்ளாகினர்.