அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டியை சேர்ந்தவர் பழனியான்டி (40). சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி அடைக்காயி குழந்தைகளுடன் லெக்கணாப்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அடைக்காயி காலையில் வீட்டை பூட்டிவிட்டு கீரனூரில் உறவினர்களின் திருமணத்திற்கு தன் குழந்தைகளுடன் சென்றிரு்நதார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஐம்பது ஆயிரம் ரொக்கம் மற்றும் 7.5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
வீடு புகுந்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலை! - அன்னவாசல்
பட்டுக்கோட்டை: அன்னவாசல் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து, நகை பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
1
திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அடைக்காயி, பணம் மற்றும் நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.