தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசவத்தையடுத்து சுயநினைவை இழந்த பெண்: போராடி காப்பாற்றி மருத்துவர்கள்! - pudhukottai medical college dean meenakshi sundaram

புதுக்கோட்டை: பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் காப்பற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம்  pudhukottai medical college dean  pudhukottai medical college dean meenakshi sundaram  pudhukottai
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சிசுந்தர்ம்

By

Published : Jun 24, 2020, 6:37 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்த கிளாஸ்டிஸ் கீதா என்ற கர்ப்பிணி, பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு மறுநாள் வயிற்றிலிருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாயுக்குள் சென்றதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார்.

இதையடுத்து அவர், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 96 விழுக்காடு இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் செறிவு 84 விழுக்காடு மட்டுமே இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கினர்.

ஐந்து நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு பிறகு 50 விழுக்காடு செயற்கை சுவாசம் குறைக்கப்பட்டது. நேற்று (ஜூன் 23) முற்றிலும் குணமடைந்த கிளாஸ்டிஸ் கீதா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனக்குச் சிகிச்சையளித்துக் காப்பற்றிய மருத்துவக் குழுவினருக்கு கீதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சிசுந்தரம், "சுயநினைவை இழந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது என்பது எப்பொழுதும் சவாலானது. மருத்துவப் பேராசிரியர் பாலமுருகன், மகப்பேறு பேராசிரியர் ராமதாஸ், மார்பக நோய் வல்லுவநர் தாமோதரன், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் இணைந்து போராடியதன் விளைவாக கீதா காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதன்மூலம் மருத்துவர்கள் ஒரு குடும்பத்தில் ஒளியேற்றியுள்ளனர். இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் இரண்டு லட்சம் ரூபாய்வரை செலவாகும்" என்றார்.

இதையும் படிங்க:கரோனாவுடன் வெளியூர் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details