புதுக்கோட்டை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர் - pudhukottai collector flew giant balloon for corona awareness
புதுக்கோட்டை: நகராட்சி சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பறக்கவிட்டார்.

இதற்கிடையில் நேற்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு' என்ற வாசகங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் படங்களும் அடங்கிய ராட்சத பலூனை, புதுக்கோட்டை புதியப் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பறக்கவிட்டார். இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க... கரோனா: நடமாடும் ஏடிஎம் வாகன சேவை தொடக்கம்