தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் கரோனாவில் இருந்த மீண்டவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு - pudhukotai

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட செல்வராஜ் என்பவருக்கு புதிதாக கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவில் இருந்த மீண்டவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
கரோனாவில் இருந்த மீண்டவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

By

Published : May 22, 2021, 10:57 PM IST

ஆலங்குடி தாலுகா வெல்லக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவருக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கை, கால் வீக்கம், முகத்தில் கரும்புள்ளி ஏற்பட்டதால் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால், அவர் ஏற்கனவே கரோனாவிற்குச் சிகிச்சை பெற்ற அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details