புதுக்கோட்டை: கடந்த திமுக ஆட்சியில் உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக்கூடிய காய்கறிகளை நேரடியாக பொதுமக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரம் செய்து லாபம் ஈட்டுவதாகும்.
வியாபாரம் பாதிப்பு
புதுக்கோட்டை உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையிடம் அடையாள அட்டை பெற்று நேரடியாக தாங்கள் விளைவிக்கக் கூடிய பொருள்களை பொதுமக்களுக்கு வியாபாரம் செய்து லாபம் ஈட்டி வந்தனர்.
ஆனால் தற்போது உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் சிலர் கடை போட்டு வியாபாரம் செய்வதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் உழவர் சந்தையில் விற்பனை செய்து வரும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்திருந்தனர்.