புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் செலுத்தும் இடத்தில், குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் திரும்பி செல்கின்றனர்.
தேங்கி நிற்கும் மழைநீரால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தடுமாற்றம்.
புதுக்கோட்டை: மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அரசு அலுவலகங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அலுவலகம் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், தங்களால் நடந்து சென்று மின் கட்டணத்தை கட்ட முடியவில்லை என்றும், எனவே மின்வாரிய நிர்வாகம் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், கடைசி நாள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மழை நீர் தேங்கி நின்றால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் மின்வாரிய அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.