தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இலவச சித்த மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த முகாமில் மருத்துவ குணம் அடங்கிய பல்வேறு மூலிகைகள், பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.
நவீன கால வாழ்க்கை முறையில் பொதுமக்கள் நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற நல்வாழ்வு வாழ முடியும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் இலவச சித்த மருத்துவ மூலிகைக் கண்காட்சி