நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தது. பின் தளர்வுகள் வந்ததை அடுத்து பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதால், மின் துறை நிறுவனங்கள் சார்பில் மின்நுகர்வோர் கட்டணம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான மின்கட்டணம் பொதுமக்களுக்கு வழங்கியதில் மாதந்தோறும் சராசரியாக கட்ட வேண்டிய மின் கட்டணத்தில் இருந்து ஐந்து மடங்கு மின் கட்டண உயர்வு அவர்களிடம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து அரசுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
ஆனால் இதுகுறித்து மின்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கலாம் சேவை மையம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மின் கட்டணத்தை தனித்தனி கட்டணத் தொகையாக தர வேண்டும். மேலும் நிலுவைத் தொகையை 12 மாதமாக தனியாக பிரித்து செலுத்தும் வசதியை செய்து தர வேண்டும். நிலுவைத் தொகைக்கு வசூலிக்கப்படும் 2 சதவீத வட்டியை விதிக்கக் கூடாது என வலியுறுத்தி புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள மரப்பாலம் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்! - Puducherry District News
புதுச்சேரியில் கரோனா காலத்தில் கட்டப்படாத மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் மின் துறையை கண்டித்து முதலியார்பேட்டை கடலூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
Last Updated : Nov 1, 2020, 4:55 PM IST