தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை அளிக்க கட்டணமில்லா எண்கள்!

புதுக்கோட்டை: வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை அளிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி

By

Published : Oct 24, 2019, 7:23 AM IST

வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை அளிக்க, கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்பந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு போன்றவை தொடர்பான விவரங்களையும் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்.

நகராட்சிப் பகுதிகள்

  • புதுக்கோட்டை நகராட்சி 04322222252 / 04322222253
  • அறந்தாங்கி நகராட்சி 04371220556

பேரூராட்சி பகுதிகள்

  • ஆலங்குடி பேரூராட்சி 18004257212
  • அன்னவாசல் 18004257213
  • அரிமளம் 18004257214
  • இலுப்பூர் 18004257215
  • கறம்பக்குடி 18004257216
  • கீரமங்கலம் 18004257217
  • கீரனூர் 18004257218
  • பொன்னமராவதி 18004257219

கிராம ஊராட்சி பகுதிகள்

  • அன்னவாசல் 18004259014
  • அறந்தாங்கி 18004259015
  • அரிமளம் 18004259016
  • ஆவுடையார்கோவில் 18004259017
  • கந்தர்வக்கோட்டை 18004259018
  • கறம்பக்குடி 18004259019
  • குன்றாண்டார்கோவில் 18004259020
  • மணமேல்குடி 18004259021
  • பொன்னமராவதி 18004259022
  • புதுக்கோட்டை 18004259023
  • திருமயம் 18004259024
  • திருவரங்குளம் 18004259025

மேலும், மாவட்ட அளவில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அலுவலக கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800-425-9013 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details