புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருடந்தோறும் பிப்ரவரி 18ஆம் தேதி கடற்படை எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - pudhukottai youth rally protest
புதுக்கோட்டை: கடற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை முன்னிட்டு வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை தடுத்து நிறுத்தி இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு புதிய தொழில் வளர்ச்சிகளை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை மாவட்ட சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க்:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்