புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுதர்சன். இவர் திருமயத்தில் பணியாற்றிய போது வாட்ஸ்-ஆப் குரூப் ஒன்றை தொடங்கி அதற்கு திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் என பெயரிட்டு அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி உடற்பயிற்சி அளித்து வந்தார்.
இதனிடையே சுதர்சனுக்கு நிர்வாக ரீதியாக இடமாற்றம் அளித்து மேலதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை அறிந்த திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் சுதர்சனனை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.