தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார்மயமாக்கப்படும் நெடுஞ்சாலைச் சாலைப் பராமரிப்புப் பணி! - Edappadi Palanisamy

புதுக்கோட்டை: நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியார்மயமாக்குவது சமூகநீதி புறக்கணிக்கப்படுவதாகப் பணியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெடுஞ்சாலை சாலை பராமரிப்பு பணி
நெடுஞ்சாலை சாலை பராமரிப்பு பணி

By

Published : Jan 11, 2021, 8:39 AM IST

புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் அம்ச ராஜ் சிறப்புரையாற்றினார்.

பணியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அம்ச ராஜ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாடு முதலமைச்சர் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறையில் சாலை பராமரிப்பதற்குத் தொடர்ந்து தனியார்மயமாக்கப்படுவதால் சமூகநீதி என்பது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய் கொண்டுள்ளது. புதிய சாலை போடும்போது மூன்றாண்டுகள் பராமரிப்பு என்பது சாலை போடும் பணத்திலேயே செய்யப்பட்டுவந்தது.
ஆனால் தற்போது ஒப்பந்தகாரர் செய்ய வேண்டும் என்றும் அதற்கு என்று கூடுதல் தொகை அவருக்கு வழங்கப்படுவது என்பது சரி அல்ல.
மேலும் சாலைப் பணியாளர்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் சென்னையில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்தினரோடு முகாமிட்டுப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details