தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2019, 1:37 AM IST

ETV Bharat / state

தீபாவளியால் கோழியின் விலை உயர்வு!

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகையையொட்டி 300, 400 ரூபாய்க்கு விற்ற நாட்டுக் கோழியின் விலை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளியால் கோழிவிலை உயர்வு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் வெடி, பலகாரம், இனிப்பு வகைகள் ஒருபுறமிருந்தாலும் அசைவ உணவுகள் சமைப்பது என்பது மற்றொரு சிறப்பாகும். பண்டிகையையொட்டி நாட்டுக் கோழியின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

கோழிவிலை உயர்வு

நாட்டுக் கோழியின் விலை கிலோவிற்கு 300 முதல் 400 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 900 ரூபாய்க்கு மாவட்டத்தில் விற்கப்பட்டுகிறது. ஒரு சேவலின் விலை 200 ரூபாய்-யில் இருந்து தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு கோழிகள் அனுப்பப்படுகின்றன. விலை எதுவாக இருந்தாலும் தீபாவளி பண்டிகை என்பதால் மக்கள் அதிகளவில் கோழியை வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க: சூடுபிடித்த தீபாவளி: விற்பனை விறுவிறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details