புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டிருந்தனர். இதனால் அவதுறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி கலவரம்; பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்திய 30 பேர் கைது! - நள்ளிரவு
புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அந்த கலவரத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி சூறையாடினர். பொன்னமராவதி அண்ணாசாலை, பொன் புதுப்பட்டி, நாட்டுக்கல், பொன்னமராவதி பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளின் உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தினர்.
இந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதில் ஒரு பகுதியாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களை வீடியோ ஆதாரத்தின் பேரில் சுமார் 30 நபரை பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.