தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை - ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

By

Published : Jan 14, 2023, 10:00 AM IST

புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டையில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஆடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று (ஜனவரி 13) ஆட்டுச் சந்தையில் வியாபாரம் அமோகமாக நடந்தது.

திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகள் மொத்தமாக கொண்டு வரப்பட்டன. அதிகாலை முதலே விற்பனை தொடங்கிய நிலையில் இருந்து மொத்தமாக ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. வழக்கத்தை விட வெள்ளாடுகள் 8 ஆயிரம் முதல் 15,000 ரூபாய் வரைக்கும், செம்மறி ஆடுகள் 7,000 ஆயிரம் முதல் 9,000 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: இறையூர் விவகாரத்தில் நடந்தது என்ன? - சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details