தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊர் மெய்வழிச்சாலை... புதிய மதம்.. 69 சாதி மக்கள் கொண்டாடும் பொங்கல் விழா! - மெய்வழிச்சாலை மக்களின் பொங்கல் கொண்டாட்டம்

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் மெய்வழிச்சாலை கிராமத்தில் 69 சமூகம் மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

pongal special
pongal special

By

Published : Jan 15, 2020, 6:13 PM IST

தென் தமிழ்நாடான மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகளும், வரலாற்று ஆவணங்களும் கூடுதலாகக் கிடைக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புகளில் மட்டுமல்ல, தனித்த அடையாளத்தையும் பெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவசல் அருகே உள்ளது மெய்வழிச்சாலை.

இங்கு வசிக்கும் மக்கள் புதிய விதமான மத வழிபாடு, ஆடை அணியும் முறை, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் எல்லோரும் தங்களது பெயருக்கு முன்னால் சாலை என்று சொந்த கிராமத்தின் அடையாளத்தை பதிவு செய்கின்றனர். இங்குள்ளவர்கள் பிரம்ம பிரகாச மெய்விழிச்சாலை ஆண்டவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

மெய்வழிச்சாலை கிராம மக்கள் பல பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும், தை திருநாளான முதல் நாளை ஊருக்கு மத்தியில் அனைவரும் ஒன்று கூடி பொது பொங்கல் வைத்து, பாட்டு பாடி மகிழ்வார்கள். இவர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு பிரம்ம பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற மெய்வழிசாலையில் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மெய்வழிச்சாலை மக்களின் பொது பொங்கல்

மெய்வழிச்சாலையின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த கிராமத்தில் இதுவரை மின்சார வசதி கிடையாது. அங்குள்ள மக்கள் அதனை பொருட்டாகவே மதிக்கவில்லை. சோலார் மூலம் வீட்டுக்கொரு விளக்கு மட்டுமே உள்ளது. குடிசை வீடுகள்தான் அவர்கள் தங்கியிருக்கும் வீடு. இந்நிலையில், ஒரே இடத்தில் 69 சமூகத்தை சேர்ந்தவர்கள், பிற மதத்தினரை சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் வரிசையாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

உரியடி அடித்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த முதலமைச்சர்!

இத்தகைய பொங்கல் விழா தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் கொண்டாடப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details