தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,440 மது பாட்டில்களை உடைத்த காவல் துறை! - புதுக்கோட்டையில் 1440 மது பாட்டில்களை தரையில் ஊற்றிய காவல் துறை

புதுக்கோட்டை: பொன்னமராவதி பகுதிகளில் தடையை மீறி மது விற்றவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,440 மது பாட்டில்களில் இருந்த மதுவை காவல் துறையினர் தரையில் ஊற்றினர்.

மதுபானங்களை தரையில் ஊற்றிய காவல் துறையினர்
மதுபானங்களை தரையில் ஊற்றிய காவல் துறையினர்

By

Published : Apr 12, 2020, 2:59 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியுள்ள நிலையில் பல இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் தடையை மீறி மது விற்றவர்களிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,440 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

அந்த பாட்டில்களில் இருந்த மதுவை தற்போது காவல் நிலைய வளாகத்தில் குழிதோண்டிய பள்ளத்தில் காவல் துறையினர் ஊற்றி அழித்தனர்.

மதுபானங்களை தரையில் ஊற்றிய காவல் துறையினர்

இதையும் படிங்க: தடையை மீறி மது விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது

ABOUT THE AUTHOR

...view details