தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குணடர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - Pudukottai district news

புதுக்கோட்டையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று ரவுடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கும் பாய்ந்த குண்டாஸ்
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கும் பாய்ந்த குண்டாஸ்

By

Published : Sep 28, 2021, 8:08 AM IST

புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் ரவுடிசம், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக ரவுடி பட்டியலில் உள்ள குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருக்கோகர்ணம் காவல் சரகத்தில் தொடர் குற்றச் செயல், ரவுடிசம் செய்து வந்த திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த சின்ன மணிகண்டன் (27), விஜய் என்ற கோழி விஜய் (21), கருப்பசாமி (21) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது போல் தொடர் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் மூவரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையிலிருந்து நேற்று (செப்.27) திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது

ABOUT THE AUTHOR

...view details