தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை: காதல் விவகாரமா? - இளம்பெண் தற்கொலை

புதுக்கோட்டை: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்த 50 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது நகைக்காகச் செய்யப்பட்ட கொலையா அல்லது காதல் விவகாரமா என்பது குறித்த காவல் துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை
இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

By

Published : Apr 28, 2021, 9:54 AM IST

Updated : Apr 28, 2021, 10:39 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகப்பிரியா (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்.காம். முதலாமாண்டு படித்துவந்தார்.

பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் சிவகாமி வீட்டிற்குத் திரும்பிவந்தார்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் லோகப்பிரியா இறந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்சியடைந்த சிவகாமி, கதறியபடி அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், லோகப்பிரியா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரனையில், லோகப்பிரியாவை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகளைத் திடுடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், லோகப்பிரியாவை கொலைசெய்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வந்த நபராக இருக்கலாம் எனவும், அவருக்குத் தெரிந்த நபரே கொலைசெய்திருக்கலாம் எனவும் காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், லோகப்பிரியா தமிழ்ச்செல்வன் என்பவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்குப் பிடிக்கவில்லை.

சுரேஷ் லோகப்பிரியாவை விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுரேஷ் அந்தப் பெண்ணிற்கு அண்ணன் முறை வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லோகப்பிரியாவின் காதலரும் அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வன் வருவது சுரேஷுக்குப் பிடிக்கவில்லை, சுரேஷ் வருவது தமிழ்ச்செல்வனுக்குப் பிடிக்கவில்லை. இந்நிலையில்தான், லோகப்பிரியா கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கொலைசெய்தவர் வீட்டிலுள்ள 30 சவரன் நகைகள், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, லோகப்பிரியாவின் இருசக்கர வாகனத்தை வைத்து காவல் துறையினர் சுரேஷை கைதுசெய்தனர்.

மேலும், லோகப்பிரியாவின் காதலன் தமிழ்ச்செல்வனையும் சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

மேலும், லோகப்பிரியாவின் தாயார் சிவகாமியிடமும் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இதில், லோகப்பிரியாவை யார் கொலைசெய்தார் என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண் கொலை - எட்டு மாதங்களுக்கு பின் திருமணத்திற்கு மீறிய உறவு

Last Updated : Apr 28, 2021, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details