புதுக்கோட்டை மாவட்டம் கீழ இரண்டாம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்துவந்த தனலட்சுமி, தனது வீட்டை பூட்டிவிட்டு கீழசெவல்பட்டி கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் (அக். 31) சென்றுள்ளார்.
பின்னர், இன்று (நவ. 02) அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.