புதுக்கோட்டை:திருமயம் அருகே புளிய மரத்தின் மீது பையில் வைத்து தொங்கவிடப்பட்ட பச்சிளம் குழந்தை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தின் மீது பையில் தொங்கவிடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு! - கட்டைப்பையில் கிடந்த குழந்தை
திருமயம் அருகே புளிய மரத்தின் மீது பையில் வைத்து தொங்கவிடப்பட்ட பச்சிளம் குழந்தை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழத்தேமுத்துப்பட்டியில் உள்ள ஒரு புளிய மரத்தடியில் பிறந்து ஒரு சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து தொங்கவிட்டிருந்தது. குழந்தையின் அழுகுரலை வைத்து அப்பகுதி மக்கள் தேக்காட்டூர் வி.ஏ.ஓ.வுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அக்குழந்தையை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவறான உறவில் பிறந்த குழந்தையா அல்லது யாரும் வளர்க்க இயலாமல் இக்குழந்தையை விட்டுவிட்டு போனார்களா என்பது தொடர்பாக நமணசமுத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு கீரமங்கலம் அருகே கைவிடப்பட்ட ஆண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.