தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வானத்தை நோக்கி சுட்ட போலீசார் - விளக்கமளிக்க ஆட்சியர் உத்தரவு - police gun sghoot issue

புதுக்கோட்டை: போசம்பட்டி மோதலை தவிர்க்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து விளக்கமளிக்க கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

gun shoot
gun shoot

By

Published : Jul 22, 2020, 2:13 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்ட அருகேயுள்ள போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் என்பவருக்கும், அதே பகுதியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான பரமசிவத்திற்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பனிப்போர் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பரசிமவத்தின் ஆதரவாளர் ஒருவர் உடையப்பன் குறித்து அவதூறாக சமூகவலைதளத்தில் பேசியதால் இருதரப்புக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், பரமசிவத்தின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கு அறிவாளால் வெட்டு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முன்பே, இருதரப்புக்குமிடையே கடும் சண்டை முற்றியது.

தகராறு நடக்குமிடத்தில் இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு காவல் ஆய்வாளர் சரவணன் எச்சரித்துள்ளார். இருப்பினும் இருதரப்புக்குமிடையேயான மோதல் நின்றபாடில்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, காவல் ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், இருதரப்பினரும் கலைந்துச் சென்றனர்.

இந்நிலையில், போசம்பட்டியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க்க புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணிக்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியணும்; கந்தனுக்கு அரோகரா' - ரஜினி ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details