தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்! - பற்முதல் செய்யாப்ட்ட வாகனங்கள்

புதுக்கோட்டை: இலுப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம்

By

Published : Aug 31, 2019, 9:52 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகையில், பொக்லைன் இயந்திரம் முலம் லாரிகளில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக இலுப்பூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் ஆய்வாளர் ஜெயராமன், சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல் துரையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செயப்பட்ட மணல் கடத்திய வாகனம்

இதையறிந்த மணல் கொள்ளையர்கள் லாரி, பொக்லைன் இயந்திரங்களை எடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனங்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது, மலைக்குடிப்பட்டி என்னும் இடத்தில் பொக்லைன் இயந்திரத்தை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். ஆனால் அதிவேகமாக சென்ற லாரி அங்கிருந்து தப்பி சென்றது.

பின்னர், கல்குத்தாம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்பரேட்டர் கார்த்தி (23), வாகன உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details