புதுக்கோட்டையில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேற்று (பிப். 23) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வடவாளம், மூக்கம்பட்டி, சம்பட்டிவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதேபோன்ற எல்லா மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்துவருகிறது பாஜக. இது ஜனநாயகத்திற்கு, சட்டத்திற்கும் விரோதமான செயலாகும்.
காவிரி உபரிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று எதிர்ப்பதற்கு கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. கடலில் வீணாகக் கலக்கக்கூடிய தண்ணீரை இதுபோன்ற திட்டங்களால்தான் சேமிக்க முடியும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தற்போது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதுபோல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே செய்திருக்கலாம். காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை நான் எதிர்க்கவில்லை.