தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி! - lover petition for protection to pudukottai police

Pudukkottai: புதுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
புதுக்கோட்டையில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 8:06 PM IST

புதுக்கோட்டையில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

புதுக்கோட்டை:ஆவுடையார்கோவில், மேலமடா விளாகம் பகுதியைச் சேர்ந்தவர், ஆர்த்தி (21). அதே பகுதியில் இரண்டாம் வீதியில் வசித்து வருபவர், ருத்ரமூர்த்தி. இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆர்த்திக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று வீட்டை விட்டு இருவரும் வெளியேறி, புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை முருகன் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், திருமணம் முடிந்து ருத்ரமூர்த்தி வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ஆர்த்தியின் உறவினர்கள் ருத்ரமூர்த்தி வீட்டிற்குச் சென்று ருத்ரமூர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை..! பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் உள்பட மூவர் கைது!

இதனால் அச்சமடைந்த இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி வீட்டார் தரப்பிலிருந்து, ருத்ரமூர்த்தி குடும்பத்தினருக்கும், தங்களுடைய உயிருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.22) இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

மேலும், உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், ஆர்த்தியினுடைய உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் ருத்ரமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களையும் ஏதாவது செய்து விடுவார்கள். எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புகார் அளிக்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார். இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சிறிது நேரத்திற்கு பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:கள்ளத்தொடர்பால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீட்டு முன் தலையை வீசிய கொடூரம்..

ABOUT THE AUTHOR

...view details