தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செலவைவிட ஜனநாயக கடமைதான் முக்கியம் - வாக்களிக்க சொந்த ஊர் திரும்பிய நபர்! - வாக்களிக்க சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு திரும்பிய நபர்

புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், செலவைவிட ஜனநாயக கடமைதான் முக்கியம் என வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவர் பெங்களூருவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த விஜயகுமார்
சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த விஜயகுமார்

By

Published : Dec 27, 2019, 7:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்குச் சென்று ஏராளமானோர் குடியேறியுள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக எதற்கு இவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்று அலட்சியமாக இருப்பவர்கள் மத்தியில், ‘செலவு, அலைச்சல் எல்லாம் முக்கியமில்லை, ஜனநாயக கடமையை ஆற்றுவதுதான் முக்கியம்’ என்று தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தை விட்டு பெங்களூருவில் குடியேறி முப்பது வருடமான விஜயகுமார் என்பவர் ஊராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த விஜயகுமார்

இது குறித்து விஜயகுமார் தெரிவித்ததாவது, நான் பிறந்து வளர்ந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமம். முப்பது வருடமாக எனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறேன். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்துகொண்டு இருக்கிறது. அதில், வாக்களிப்பதற்காக இன்று காலை என் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

என்னதான் அலைச்சலாக இருந்தாலும், வந்து செல்வதற்கு செலவானாலும் ஜனநாயக கடமையை விட்டுக் கொடுக்க முடியுமா? முதலில் கடமைதான் முக்கியம். எங்கு போய் குடியேறினாலும் சொந்த ஊருக்கு வந்து ஓட்டுப்போடுவதில்தான் பெருமை இருக்கிறது என கூறினார்.

இதையும் படிங்க: முதுமையிலும் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி!

ABOUT THE AUTHOR

...view details