தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதிய தொகுப்பு வீடுகள் வேண்டும்' - சாலை மறியலில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் வலியுறுத்தல்! - நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் கிராமத்தில் பழுதடைந்த வீடுகளை சீர் செய்து தரக்கோரி, நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

people protest

By

Published : Nov 7, 2019, 8:37 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் பகுதியில், 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் பழுதடைந்த நிலையில், மழைக் காலங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன.

இதனைச் சரிசெய்து கொடுக்கவும், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரக்கோரியும் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, அங்கு விரைந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நரிக்குறவர் இன மக்களின் வீடுகளைப் பார்வையிட்டார். அதன்பின், அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

people protest

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

துணை முதலமைச்சரின் ஊரில் அவமரியாதைக்குள்ளான திருவள்ளுவர் சிலை!

ABOUT THE AUTHOR

...view details